தமிழக்ததில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரைவில் விரிவுப்படுத்தப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ஆசிரியர் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் நிரப்ப வேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. நிதி அமைச்சகத்திடம் காலிப்பணியிட விவரங்களை கொடுக்கிறோம், அவர்கள் நிதிச்சுமைக்கு ஏற்ப பணியிடங்களை நிரப்பி வருகின்றனர். காலை உணவு திட்டத்தை பொருத்தவரையில், அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளுக்கும் கொண்டு வர முதல்வர் திட்டமிட்டு வருகிறார். இதற்கான அறிவிப்பு வரும் பட்ெஜட்டில் வெளியாக வாய்ப்பு உள்ளது என்றார், பின்னர், அவர் பேசும்போது, தைவானில் ஊக்கத்தொகையுடன் உயர்கல்வி படிப்பதற்கு இந்தியாவில் 3 மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், அதில் இருவர் தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள். மேலும் வரலாறு பாடத்தில் 600க்கு 600 மதிப்பெண் கொடுத்ததும் அரசு பள்ளிதான். அரசு பள்ளிகளை தன்னிறைவு பெற்ற பள்ளிகளாக வைத்திருக்க வேண்டும் என்றார், அவர்.