TN Booth Level Officers Suspension | வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சஸ்பெண்ட் | திருப்பத்தூர் மாவட்டம்
TN Booth Level Officers Suspension
திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட பத்திரிக்கை செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பத்தூர் மாவட்டத்தில் 26.11.2022 அன்று தேர்தல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2023, தொடர்பாக சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ளப்பட்ட திடீர் தணிக்கையின்போது, பணியில் இல்லாத வாக்குசாவடி நிலை அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்யுமாறு திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கு உத்தரவிட்டார்.
Read Also: குழந்தைகளுக்கு தண்டணை – தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
அதன்படி வாணியம்பாடி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர், சிறப்பு முகாமின்போது பணியில் இல்லாத வாக்குசாவடி நிலை அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில், கலைவாணி, அனிமேட்டர், வாணியம்பாடி நகராட்சி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆம்பூர் தொகுதியில், சுவாதிலட்சுமி ICDS, கவிதா ICDS, பத்மாவதி ICDS, வசந்தி, கிராம உதவியாளர், மாதனூர் கிராமம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஜோலார்பேட்டை தொகுதியில், எஸ்.கீதா, அங்கன்வாடி பணியாளர், புள்ளானேரி, விமலா, அங்கன்வாடி பணியாளர், ஏலகிரி கிராமம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் மற்றும் தீபா, அங்கன்வாடி பணியாளர், பூரிகமாணிமிட்ட நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் தொகுதியில், ராணி, அங்கன்வாடி பணியாளர், குளிச்சி மோட்டூர், சிவானந்தம், சத்துணவு அமைப்பாளர், வசந்தி, சத்துணவு அமைப்பாளர் (இருவரும் திருப்பத்தூர் நகரம்) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சேவியர் புஷ்பராஜ், ஆரோக்கியதாஸ் (இருவரும் சத்துணவு அமைப்பாளர் – திருப்பத்தூர் நகரம்) நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து நடைபெற உள்ள சிறப்பு சுருக்க நாட்களில் பணிபுரியாத வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்குசாவடி மைய அலுவலர்கள் மீடு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.