TN BEd Admission 2023 Latest News in Tamil | பிஎட் அட்மிஷன் தேதி அறிவிப்பு
TN BEd Admission 2023 Latest News in Tamil
நான்காண்டு ஒருங்கிணைந்த பி.எட்., பட்டப் படிப்பு சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள கல்வியியல் கல்லூரிகளில் பி.எஸ்சி., பி.எட்., பி.ஏ., பி.எட்., படிப்புகளில் 2023-24-ஆம் கல்வியாண்டில் சேருவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பி.எஸ்சி., பி.எட்., பி.ஏ., பி.எட்., படிப்புகளுக்கு ஒரு பருவத்துக்கு 125 வேலை நாள்களில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) விதி இருக்கிறது. இந்த விதிமுறைப்படி 125 வேலை நாள்கள் பின்பற்றப்படும்.
Read Also: சிறந்த கல்லூரி தேர்வு செய்வது எப்படி
இந்த படிப்புகளில் சேரும் மாணவர்களிடம் அவர்கள் சார்ந்த அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்து, அவர்களின் கையொப்பம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்கள் பூர்த்தி செய்த தகுதியான விண்ணப்பப் படிவத்தை, அந்தந்த கல்லூரிகள் அவர்களுக்கான ரகசிய குறியீட்டை பயன்படுத்தி, www.tnteu.ac.in என்ற இணையதளத்தில் ஆகஸ்டு 25ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிமுறைகளை அந்தந்த கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது.
இதுதவிர மாணவர் சேர்க்கைக்கான தகுதி கட்டணத்தையும் பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. அதன்படி, பதிவு கட்டணம், நூலகம், தகுதி கட்டணம் உள்பட ரூ.635 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இந்த கட்டணத்தையும் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் இணையவழியில் செலுத்த வேண்டும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.