TN BEd admission 2022 | tngasaedu.in |பி.எட் மாணவர் சேர்க்கை 2022 அறிவிப்பு
TN BEd admission 2022
தமிழ்நாடு உயர்கல்வித்துறை பி.எட் மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் செப்டம்பர் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளங்கலை பி.எட் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 24ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
Read Also: ராகிங் தடுக்க உயர் கல்வி நிறுவனங்கள் சிசிடிவி கட்டாயம்
அக்டோபர் 6ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் மற்றும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அக்டோபர் 10ம் தேதி நடைபெறும். அதன்படி மாணவர்கள்
www.tngasaedu.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். அவ்வாறு இணையத்தில் பதிவு செய்ய இயலாத மாணவர்கள் அருகில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களில் விண்ணப்பங்களை பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எட் படிப்பிற்கு விண்ணப்பிக்க பொது பிரிவினருக்கான விண்ணப்ப கட்டணம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் விண்ணப்ப கட்டணம் நிர்ணயம் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது வரிசைப்படி தாங்கள் விரும்பிய கல்லூரியை தேர்வு செய்தல் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விவரங்களை மாணவர்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.