You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TN B.Ed government college admission date 2024 | பி.எட் அட்மிஷன் 2024

TN B.Ed government college admission date 2024

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்) முதலாமாண்டு மாணவர் சோ்க்ககை்கான (2024-2025) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். 

பி.எட் விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்ப கட்டணமாக ரூ 500 செலுத்தப்பட ேவண்டும், எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் கட்டணம் ரூ 250 செலுத்தினால் போதுமானது. 

விண்ணப்ப கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு, நெட் பேக்கிங் மூலம் இணையதளம் வாயிலாக செலுத்தலாம். இணையதள வரியலாக கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai -15 என்ற பெயரில் 16.9.2024 அன்று அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைேவாலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.    

பி.எட் படிப்புக்கு விண்ணப்பிக்கும் முறை 

மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது தங்கள் விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தெரிவு செய்தல் வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை போன்ற விவரங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது. 

மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் மேற்குறித்த இணையதளம் வரியலாக அறிந்துகொள்ளலாம். 

இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள் –- 16.9.2024

இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் - 26.9.2024