TN 10TH Supplementary Exam Result Website | dge.tn.gov.in | பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு ரிசல்ட் லிங்க்
TN 10TH Supplementary Exam Result Website
அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நடைபெற்ற ஜூன்/ஜூலை 2023, பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தேர்வர்கள் உட்பட) தேர்வு முடிவினை, 26.7.2023 (புதன்கிழமை) பிற்பகல் முதல் இணையதளத்தில் இருந்து தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் டவுன்லோடு செய்வது எப்படி
தோ்வர்கள் இன்று 26.7.2023 மதியம் பிற்பகல் முதல் தங்களது மதிப்ெபண் சான்றிதழை
www.dge.tn.gov.in என்ற முகவரிக்கு சென்று NOTIFICATION பகுதியில் SSLC Examination என்ற வாசகத்தை கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில்
To check you result click this link: www.dge.tn.gov.in
“SSLC Supplementary Exam, June /July 2023 Provisional Mark Sheet Download என்ற வாசகத்தினை கிளிக் செய்து தேர்வர்கள் தங்களது தேர்வெண் (ரோல் நம்பர்) மற்றும் பிறந்த தேதி (Date Of Birth) ஆகிய விவரங்கள் பதிவு செய்து, தங்களது மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு மறுகூட்டல்
ஜூன் / ஜூலை 2023 பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு 1.8.2023 (செவ்வாய் கிழமை) மற்றும் 2.8.2023 (புதன்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் காலை 10 மணி முதவ் மாலை 5 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
Read Also: அனைத்து மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகம்
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களில் (ெதன்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு), முதன்மை கல்வி அலுவலகத்திற்கு சென்று தேர்வர்கள் பதிவு செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.