TN 10th Hall Ticket Download Date | பத்தாம் வகுப்பு ஹால்டிக்கெட் தேதி
TN 10th Hall Ticket Download Date
சென்னை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு, புதுச்சேரியில் செயல்படும் பள்ளிகளில் மாநில பாடதிட்டத்தில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் 10 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்று எழுத உள்ளனர். இவர்களுக்கான ஹால்டிக்கெட் வரும் 27ம் தேதி பிற்பகல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
Read Also: பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்
அந்தந்த பள்ளியின் நிர்வாகிகள் இணையதளத்தில் யூசர் ஐடி மற்றும் பாஸ்வோர்டு பயன்படுத்தி மாணவர்கள் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர்களின் பெயர் பட்டியலில் பெயர், பிறந்த தேதி, மொழி ஆகிய திருத்தங்கள் ஏதாவது இருந்தால் சம்மந்தப்பட்ட தோ்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி தேர்வு மையத்துக்கான பெயர் பட்டியலில் உரிய திருத்தங்கள் செய்ய தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களிடம் முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.