You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TN 10th Hall Ticket Download 2023 | dge.tn.gov.in | பத்தாம் வகுப்பு ஹால்டிக்கெட் டவுன்லோடு

Typing exam apply Tamil 2023

TN 10th Hall Ticket Download 2023 | dge.tn.gov.in | பத்தாம் வகுப்பு ஹால்டிக்கெட் டவுன்லோடு

TN 10th Hall Ticket Download 2023

அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நடைபெற உள்ள ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தத்கல் உட்பட) 17.3.2023 (வௌ்ளிக்கிழமை) பிற்பகல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

How to Download 10th Hall Ticket Private Candidates

தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று ஹால்டிக்கெட் என்ற வாசகத்தினை கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் உள்ள “SSLC Public Examination April 2023 – Hall Ticket Download” என்ற வாசகத்தினை கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (application number)/ நிரந்தர பதிவெண் (Permanent Register Number) மற்றும் பிறந்த தேதியினை (Date of Birth) பதிவு செய்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்.

Read Also: All district government Exam Office Address

ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறை தேர்வுகள் (Science Practical Examinations) 20.03.2022 முதல் 24.03.2022 வரை, அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெற உள்ளன. அறிவியல் பாட செய்முறை தேர்வுகள் தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் பயிற்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டின்றி எந்த ஒரு  தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கமாட்டார்கள்.

ஏப்ரல் 2023 பொதுத்தேர்வு கால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இணையதளத்தில் காணலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.