TN 10th English Exam false Questions | பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வு
TN 10th English Exam false Questions
பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் அமைந்த வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்க அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வு ஏப்ரல் 10ம் தேதி நடந்தது. வினாத்தாளின் முதல் பகுதியின் ஒரு மதிப்பெண் வினாக்களான இணைச் சொல் மற்றும் எதிர்ச்சொல் அமைக்கப்பட்டிருக்கும்.
Read Also: பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வு குளறுபடி கேள்விகள்
இதில் 1 முதல் 3 வரையிலான வினாக்கள் இணைச் சொல்லாகவும், 4 முதல் 6 வரையிலான வினாக்கள் எதிர்ச்சொல்லாகவும் கேட்பது வழக்கம். ஆனால், 1 முதல் 6 வரையிலான வினாக்களுக்கு இணைச் சொல் விடையளிக்க வேண்டும் என கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
இதனால் 4,5 மற்றும் 6 வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்று, அந்த வினாக்களுக்கு எந்த விடை அளித்தாலும் முழு மதிப்பெண் அளிக்க அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், வினா எண் 28க்கு (2 மதிப்பெண்) பதில் எழுத முயற்சி செய்திருந்தால் முழு மதிப்பெண் வழங்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.