திருவண்ணாமலை அருகே ஒரே கிராமத்தில் படிப்பை தொடராமல் இடை நின்ற 51 மாணவர்களை கலெக்டர் அழைத்து சென்று பள்ளியில் சேர்த்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையம் புதூர் பகுதியில் குடுகுடுப்பை குழந்தைகள் பலர் பள்ளிக்குச் சென்று படித்து வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் இந்த கல்வி ஆண்டு அவர்கள் பள்ளிப்படிப்பை தொடராமல் இடை நின்று உள்ளனர். தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அங்கு சென்று, 51 மாணவ மாணவிகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் அய்யம்பாளையம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அழைத்துச் சென்று சேர்த்து விட்டார்.தொடர்ந்து அவர்களுக்கு பாடபுத்தகங்கள், பைகள் வழங்கினார். மேலும் இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க, அவர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.