திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காவல் நிலையம் எதிரே உள்ளது ஊராட்சி ஒன்றியம் தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியின் உள்ள அறையில் காங்கேயம் வட்டாரத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய மாணவர்களுக்கான புத்தகங்கள், புத்தக பைகள், எழுதுபொருள், காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் 22ம் தேதி மதியம், இந்த அறையில் திடீரென தீ பற்றி மளமளவென எரிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், உடனடியாக தீயை கட்டுப்படுத்தினர்.
அந்த அறையில் வைக்கப்பட்ட ரூ ஒரு லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் எரிந்து நாசமானது.
வட்டார கல்வி அலுவலர் சுசீலா கூறும்போது: தீயில் எரிந்தது பழைய புத்தகம்தான், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உபகரணங்கள் ஏற்கனவே வழங்கிவிட்டோம்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |