திருப்பூர் அருேக பிளஸ் 2 தேர்வு அறையில் மொபைல்போைன பயன்படுத்திணுய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
திருப்பூர் அப்பாச்சி நகர் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு அலுவலராக ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைைம ஆசிரியர் தாமோதரன் இருந்தார். Read Also: கல்வி அமைச்சருக்கு நல்ல புத்தி கொடுங்க - ஆசிரியர்கள் வேண்டுதல்கடந்த 11ம் தேதி தேர்வு அறையில் அவர் மொபைல்போன் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், தலைமை ஆசிரியர் தாமோதரன் 3 மொபைல்போன்களை கொண்டு சென்றதும், அதை தேர்வு அறையில் பயன்படுத்தியதும் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, தேர்வுத்துறை அறிவுறுத்தலின்பேரில், பள்ளி கல்வி இயக்குனர் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.