Tiruppur DEO Amutha Arrest | திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் கைது
Tiruppur DEO Amutha Arrest
திருப்பூரில் பணி வரன்முறை ஆணை வழங்க ஐந்தாயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீதேவி இவர் திருப்பூர் காதர் பேட்டை பகுதியிலுள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2006ம் ஆண்டு அங்கு தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து 2016ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றிய கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். இந்த நிலையில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பணியாற்றியதற்கான பணி வரன்முறை ஆணை பெற வேண்டி திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு விண்ணப்பத்தி இருந்தார். இந்த பணி வரன்முறை ஆணையை வழங்க வேண்டும் என்றால் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டுமென மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அமுதா தெரிவித்துள்ளார். இதையடுத்து ஸ்ரீதேவி லஞ்ச ஒழிப்பு போலீஸ் புகார் அளித்தார்.
Read Also: முதன்மை கல்வி அலுவலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுக்களை ஸ்ரீதேவியிடம் போலீசார் கொடுத்துள்ளனர். இன்று மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு வந்த ஸ்ரீதேவி அமுதாவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கிய ரசாயனம் தொடங்கிய பணத்தை கொடுத்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அமுதாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடக் கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.