Tirupathur latest education news | மாணவியின் கட்டை விரலை உடைத்த ஆசிரியர்
Tirupathur latest education news
ஆங்கில பாடத்தில் மட்டும் குறைந்த மதிப்பெண் பெற்றதால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் மாணவியை தாக்கி, கை கட்டை விரலை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் விசமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கோடியூரை சேர்ந்த சிறுமி எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். அண்மையில் நடைபெற்ற தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் மாணவி குறைவான மதிப்பெண் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் மாணவியை ஆசிரியர் பிரம்பால் தாக்கியதாக கூறப்படும் நிலையில், மாணவியின் கட்டை விரலில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.