தூய தமிழ் பற்றாளர் விருது ரூ.20 ஆயிரம் பரிசு அறிவிப்பு
மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் வழங்கப்பட உள்ள தூய தமிழ்ப் பற்றாளர் விருதுக்கு ஜூலை 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் தெரிவித்துள்ளது.
Read Also This: அறிவோம் கலைச் செம்மல் விருது
தூய தமிழ் பற்றாளர் விருது தகுதி, பரிசுத்தொகை
இதுகுறித்து, அதன் இயக்குனர் கோ விசயராகவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு, நடைமுறை வாழ்க்கையில் தூய தமிழிலேயே பேசுகின்ற தகுதி வாய்ந்தவர்களில் இருந்து மாவட்டத்துக்கு ஓருவரைத் தேர்வு செய்து தூய தமிழ்ப் பற்றாளர் விருது, தலா ரூ.20 ஆயிரம் பரிசு தொகை, சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட உள்ளன.
தூய தமிழ் பற்றாளர் விருதுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்
இந்த விருதுக்கு தகுதி வாய்ந்தவர்கள் இந்த இணையதளத்தை கிளிக் செய்து
சொற்குவை.காம் வலைதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து வரும் ஜூலை 31ம் தேதிக்குள்
patralarvirudhu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலக வளாகம், முதல்தளம், எண் 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி நகர், சென்னை 600028 என்ற அலுவலக முகவரிக்கோ அனுப்ப வேண்டும்.
தூய தமிழ் பற்றாளர் விருது நற்சான்றிதழ்
விருதுக்கு விண்ணப்பிப்போர் தமிழறிஞர்கள், அரசு அலுவலர்கள் அல்லது பேராசிரியர்கள் இருவரிடமும் தம் தனித் தமிழ்ப் பற்றை உறுதி செய்து நற்சான்றிதழ் பெற்று இணைக்க வேண்டும். நற்சான்றளிப்போரின் ஒரு பக்க அளவிலான தன் விவரக் குறிப்புகளையும் புகைப்படத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தற்போது வாழும் மாவட்டத்தை குறிப்பிட்டுதான் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாள் (ஜூலை 31) நிறைவடைந்ததும் விண்ணப்பிப்போரின் தமிழ்ப் பற்றை ஆராயும் வகையில் எந்த நாளில் வேண்டுமானாலும் முன்னறிவிப்பின்றி கைப்பேசி மூலமாக நேர்காணல் நடத்தப்படும். உரிய சான்றுகளுடன் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.