தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஒரு பள்ளி மாணவன் மீது நேற்று முன்தினம் சக மாணவர்கள் சரமாரியாக தாக்கினர். அதில் அந்த மாணவனை அவர்கள் ஜாதிய ரீதியாக தாக்குதல் நடத்தியதாகவும், இதுதொடா்பாக இரண்டு பள்ளி மாணவர்கள் உட்பட மூன்று காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள மேல்நிலை பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அவர்கள் ஜாதி பாகுபாடு தீமைகள் குறித்தும், அதன் சட்ட நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்துனர். மேலும், பள்ளியில் இருந்த ஜாதி ரீதயான குறியீடுகள், அடையாளங்கள் உள்ளிட்டவை கருப்பு நிற வர்ணங்கள் வைத்து அழித்தனர். மேலும், அவர்கள் ஆசிரியர்களிடம் ஜாதிய குறித்தான தீமைகளை எடுத்துரைக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினர்.