மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள திருவாதவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தண்ணாயிரமூர்த்தி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் விஜயகுமார் மற்றும் ஹரி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக சாலையோர மக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் தொடர் சேவைகள் செய்து வரும் ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ் மற்றும் சேக் மஸ்தான் கலந்து கொண்டு நெகிழியின் பாதிப்பை எடுத்து கூறியும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கோடையில் பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள் என்று கூறியதை விளக்கியும், மாணவர்களுக்கு வெயில் காலம் வந்து விட்டது எங்களுக்கும் தண்ணீர் ஊற்றுங்கள் என்ற வாசகம் பதித்த மீண்டும் மஞ்சப்பையினை இலவசமாக அனைவருக்கும் வழங்கினார்கள். இவர்கள் 5000 மேற்பட்ட மஞ்சப்பையினை பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளார்கள். பின்னர் அனைவரும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியினை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தார்கள்.