சென்னை, செப்டம்பர் 30: அக்டோபர் 3ம் தேதி பொதுவிடுமுறை அல்ல என்று தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு தகவல் மையம் விளக்கம் அளித்துள்ளது.
ஆயுத பூஜை தொடர் விடுமுறை முன்னிட்டு, அக்டோபர் 3ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளதாக, தினமலர் செய்தி அட்டையில் செய்தி இன்று வெளியாகி இருந்தது. மேலும், இந்த செய்தி அட்டை குழுக்களில் பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில், TN Fact Check எனப்படும் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு தகவல் மையம், அதன் எக்ஸ் தளப்பதிவில், அக்டோபர் 3ம் தேதிடி அரசு பொதுவிடுமுறை அல்ல என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், அந்த செய்தி, பொய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.