You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

The Ultimate Guide To Physical Education Teachers Duty And Responsibility - உடற்கல்வி ஆசிரியர் பணி மற்றும் கடமை என்ன

Eco Club Activities Fund in Tamil

உடற்கல்வி ஆசிரியர் பணி அனைத்து பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள்/ இயக்குனர்கள் இருப்பார்கள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் சக பாட ஆசிரியர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் பணிகள் மற்றும் கடமைகள் குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை. வேலூா் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் செயல்முறைகள் (13-12-2021) அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் பணி மற்றும் கடமை என்ன என்பது இங்கு காணலாம்.

பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் கடமை என்ன?

உடற்கல்வி ஆசிரியர் பணி என்பது பள்ளிகளில் மிகப்பெரிய பங்கு உள்ளது. தலைமை ஆசிரியருக்கு அடுத்தபடியாக பள்ளியில் மாணவர்களின் ஒழுங்கு, உடல்நலம், உடலை எந்தவிதமான சூழ்நிலைக்கும் ஏற்றவாறு பணி செய்யக்கூடிய அளவுக்கு தயார் செய்தல், மூளை திறன், உடற்திறன்களை வளர்த்தல் போன்ற மிக முக்கிய பணிகள் உடற்கல்வி ஆசிரியரே செய்ய முடியும்.

மேலும் தலைமை ஆசிரியருக்கும், ஏனைய பிற ஆசிரியர்களின் நல்ல உறவுக்கு பாலமாக செயல்படக்கூடியவர் உடற்கல்வி ஆசிரியர்.

  • மாணவ, மாணவியர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பள்ளி சீருடையில் பள்ளி காலை வழிபாட்டிற்கு முன்னதாகேவ பள்ளிக்கு வருகின்றனரா என்பதை கண்காணித்தல்
  • பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தை தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களுடன் இணைந்து ஒழுங்குப்படுத்தி வழிபாடு நல்ல முறையில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் உடற்கல்வி ஆசிரியர் முன்நின்று எளிய நடைமுறையில் ஆரம்பித்து யோகா பயிற்சியுடன் (தியானம்) முடிக்க வேண்டும்.
  • பள்ளி பாடவேளையில் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தில், விளையாட்டு மைதானத்தில் மற்றும் பிற இடங்களில் விதிகளுக்கு புறம்பாக நடமாடும் மாணவர்களை கண்டிப்புடன் கண்காணித்து வகுப்பிற்கு செல்ல நடவடிக்கை எடுத்தல்
  • தலைமையாசிரியர் தயாரித்து வழங்கும் பாட வேளை அட்டவணையின்படி வகுப்பிற்கு ஒரு வாரத்திற்கு இரண்டு பாடவேளை போன்ற உடற்கல்வி வகுப்பு நடத்திட வேண்டும்.
  • உடற்கல்வி பாடவேளையில் மாணவர்களுக்கு உடல்சூடேற்றும் பயிற்சிகள், யோகா, லெஸ்லிம், டம்பள்ஸ் போன்ற சிறப்பு பயிற்சிகளை கற்றுதர வேண்டும்.
  • மாணவர்களை உற்சாகப்படுத்த விதவிதமான உற்சாகமூட்டும் விளையாட்டுகளை சொல்லித்தருவதோடு, அந்த விளையாட்டுகள் மூலம், இணைந்து செயல்படுத்துதல், மூளை திறனை பயன்படுத்துதல், மனம் உற்சாகத்தோடு இருக்கவாறு, ஊக்கத்தோடு இருப்பது போன்று பண்புகளை சொல்லி தர வேண்டும். மூத்தோருக்கு கீழ்படிதல், விதிகளின்படி விளையாடுதல், சக மாணவர்களுடன் இணைந்து நட்பாக விளையாடுதல் போன்ற பண்புகளையும் சொல்லி தர வேண்டும்.
  • பள்ளி மாணவர்களுக்கு குழு விளையாட்டுக்கள், தடகள விளையாட்டு போட்டிகள், கேரம், செஸ், வளைய பந்து போன்ற விளையாட்டுகளுக்கு குறுவட்ட அளவில் பள்ளிகல்வித்துறையால் நடத்தப்பட்டு வருகிறது. மேற்காண் விளையாட்டுகளில் திறமையுள்ள மாணவர்களை கண்டறிந்து, அவர்களை குறுவட்ட அளவிலான போட்டிகளில் பங்களிக்க வைக்கவும், அதற்கான சிறப்பு பயிற்சிகளையும் காலை மற்றும் மாலையில் தினந்தோறும் வழங்க வேண்டும். அவர்கள் குறுவட்ட அளவில் வென்று வருவாய் மாவட்டம் மாநில அளவில் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கு பயிற்சியும் ஊக்கமும், உற்சாகமும் அளித்திட வேண்டும்.
  • உடற்கல்வி பாடவேளையில் கண்டிப்பாக ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் அணிநடை பயிற்சியினை கற்றுக்கொடுக்க வேண்டும்.
  • வாரந்தோறும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையில் 45 நிமிடங்கள் பள்ளியில் அனைத்து மாணாக்கர்களுக்கும் (6 முதல் 12ம் வகுப்பு வரை) அனைத்து ஆசிரியர்களின் உதவியோடு கூட்டுப்பயிற்சி கொடுக்க வேண்டும்.
  • கல்வியாண்டு தொடக்கத்தில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் உலக திறனாய்வு போட்டிகள் நடத்தி தகுதி பெறும் மாணவர்களின் பட்டியலை ஆகஸ்டு மாத இறுதிக்குள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • பள்ளிகளுக்கு இடையே நடைபெறுகின்ற குறுவட்ட, மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர்கள் பாதுகாப்பாக அழைத்து சென்று போட்டிகள் முடிவடைந்தபின் பள்ளி வளாகம் வரை பாதுகாப்பாக அழைத்து வந்து சேர்ப்பதும் அவர்களது கடமையாகும்.
  • ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் மாணவர்கள் விளையாட தேவையான உபகரணங்கள் தலைமை ஆசிரியரின் மூலம் வாங்கி முறையாக உரிய பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும்.
  • மாணவர்களின் விளையாட்டு திறன்களை பரிசோதித்து அதனை பதிவேட்டில் பதிவு செய்து தலைமை ஆசிரியரிடம் கையொப்பத்தோடு பராமரிக்க வேண்டும்.
  • மாதம் ஒருமுறை பாடக்குறிப்பு கண்டிப்பாக எழுத்தப்பட வேண்டும். அப்பாடக்குறிப்பின்படி உடற்பயிற்சி அளித்திட வேண்டும்.
  • மாணவர்களை கல்வி ஆண்டில் ஆரம்பத்திலேயே நான்கு அணிகளாக பிரித்து ஒவ்வொரு மாதமும் குழு போட்டிகள் நடத்தி பின்னர் வெற்றி பெற்ற அணியினருக்கு பாராட்டும் பரிசுகளும் வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும்.  
  • காலை மற்றும் மாலை வேளையில் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
  • பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் (குறுவட்ட, மாவட்ட, மாநில அளவிலான) மாணவர்களை கண்டிப்பாக பங்கேற்க செய்ய வேண்டும் (6 முதல் 12ம் வகுப்பு வரை).
  • ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவ, மாணவியருக்கு விளையாட்டு விழா தவறாமல் நடத்தி விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்ட வேண்டும்.
  • பள்ளியின் நடைமுறைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய வகையில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியவர்களால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தலைமையாசிரியருடன் இருந்து செயல்பட்டு சுமூகமாக தீர்வு காண்பதும் உடற்கல்வி ஆசிரியர்களின் கடமையாகும்.
  • பள்ளி மாணவா்களின் நலன் மற்றும் பள்ளியின் நலன் கருதி தலைமையாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
  • பள்ளியில் தலைமையாசிரியர் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களை கொண்டு ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த வேண்டும்.

உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குனர்கள் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்

  • மாதவாரி பாடத்திட்டம் மற்றும் பாடக்குறிப்புகள்
  • Games Skill Test Register (Any Two Games)
  • உலக திறனாய்வு போட்டிகள், மாணவர்கள் திறன் பதிவேடு (9 மற்றும் 10ஆம் வகுப்பு) (Long Jump, High Jump, 50 mts Run, Shot put) இவைகளில் ஏதேனும் இருதிறன்.

விளையாட்டு சாதனங்கள் பதிவேடுகள்

  • பாடத்திட்டம் மற்றும் பாடக்குறிப்பேடு
  • இருப்புப் பதிவேடு
  • விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பதிவேடு
  • பழுதடைந்த பொருட்கள் பதிவேடு
  • ஏலப்பதிவேடு
  • விளையாட்டு விழா பதிவேடு
  • குறுவட்ட, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றதற்கான பதிவேடு
  • சாதனை பதிவேடு
  • மதிப்பெண் பதிவேடு

முடிவு

இத்தனை செயல்பாடுகள் சரியாக உள்ளதா என்பதை மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் உடற்கல்வி ஆய்வாளர் சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.