Thathamanji middle school Ponneri | பழங்குடி மாணவர்களுக்கு கல்வி மறுப்பு
Thathamanji middle school Ponneri
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த உள்ள தத்தைமஞ்சியில் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. 1 முதல் 8ஆம் வகுப்பு வரை 75 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளி அருகே தத்தைமஞ்சி லட்சுமி அம்மன் நகர் பழங்குடி கிராமத்தில் 40 குடும்பங்கள் உள்ளன. இங்கிருந்து, 19 குழந்தைகள் 1ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த குழந்தைகளுக்கு அரசு நடுநிலை பள்ளியில் கல்வி மறுக்கப்படுவதாகவும், குழந்தைகளுக்கு திறமை இல்லை என புறந்தள்ளி வைப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் நடத்த பள்ளி கலை நிகழ்ச்சியில் குழந்தைகளை பங்கேற்கவிடாமல் ஒதுக்கிவைத்துள்ளனர்.
Read Also: TN Booth Level Officers Suspension
மேலும் எதுவும் சொல்லி கொடுக்காமல் வீட்டு பாடங்களை பெற்றோர்களே சொல்லி கொடுக்க வேண்டும் என்றும், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களை படித்து வர வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். இதை அறிந்த பெற்றோர், ‘நாங்களே கல்வி பயிலாத நிலையில் எப்படி பிள்ளைகளுக்கு சொல்லிதர முடியும் ’ என கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆசிரியர்களின் செயலால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இதனால் விரக்தியடைந்த கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் பல முறை கல்வி துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் அளித்தனர். எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், மாணவர்கள் பள்ளிக்கு அனுப்பமால் புறகணித்தனர். மாலை வகுப்பில் மட்டும் படித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் நீடித்து வருவதால் விரக்தியடைந்த பெற்றோர், அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதில், எங்களது குழந்தைகளுக்கு கல்வியில் முன்னுரிமை அளிக்க வேண்டும், அனைத்து குழந்தைகள் போல எங்கள் குழந்தைகளையும் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்த தகலை அறிந்த பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைந்தார். அவரது உத்தரவின்பேரில், காட்டூர் வருவாய் ஆய்வாளர் சஞ்சய் பெருமாள், விஏஓ ஈஸ்வரி ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர் உஷாராணி மற்றும் பழங்குடி பள்ளி குழந்தைகளிடம் விசாரணை நடத்தினர். அதற்கு சரியான ஒத்துழைப்பு வழங்காததால் கோட்டாட்சியர் அலுவலர், தனது அலுவலகத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியரை வரவழைத்து விசாரித்தார்.