தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் செல்லாது என உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவு ஐகோர்ட் கிளையில் ரத்தானது. தஞ்சாவூர் சுப்ரமணியபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ரவீந்திரன், ஐகோர்ட் கிளையில் தாக்க செய்த மனுவில், இந்த பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டு நிலையில், தமிழ் பேராசிரியான நான், இந்த பதவிக்கு விண்ணப்பித்திருந்தேன். எனக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து தகுதி உள்ளது. ஆனால், பாலசுப்பரமணியத்திற்கு போதிய தகுதிகள் இல்லை. ஆந்திர மாநிலம் குப்பம் பல்கலையில் பணியாற்றிய அவர், அந்த பணியில் இன்னும் தொடர்கிறார், துணை வேந்தர் பதவிக்காலம் முடிந்ததும், மீண்டும் பணிக்கு செல்லலாம். பதவியேற்றதுலிருந்து சர்வதேச அளவிலான ஒரு கருத்தரங்கை கூட நடத்தவில்லை. தேடுதல் குழு விதிமீறி, இவர் முன்னாள் துணைவேந்தர் ஒருவரும், செனட் உறுப்பினர் ஒருவர் தேடுதல் குழுவில் இடம்பெற்றனர். இது விதிமீறலாகும். இதேபோல், துணைவேந்தர் நியமனத்துக்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழு தரப்பில் யாரும் உறுப்பினராக இடம்பெறவில்லை. எனவே, தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பாலசுப்பரமணியம் நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்றும், ரத்து செய்து உத்தரவிட வேண்டும், என கூறியிருந்தார். மனுவை விசாாித்த தனி நீதிபதி, துணைவேந்தர் பாலசுப்பரமணியன் நியமனத்தில் விதிமீறல் உள்ளது. தேடுதல் குழு அமைத்ததில் விதிகள் பின்பற்றபடவில்லை எனக்கூறி நியமனத்தை ரத்து செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து, துணைவேந்தர் தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் ஐகோர்ட் கிளையில் அப்பீல் செய்தனர். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் எஸ்.ஆனந்தி ஆகியோர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பாலசுப்பரமணியன் நியமிக்கப்பட்டது செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர்.