ரூ 1.25 கோடி இழப்பு விவகாரத்தில் தஞ்சை கல்வி அலுவலக பணியாளருக்கு கட்டாய ஓய்வை பள்ளி கல்வித்துறை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் 1995, 98ம் ஆண்டு அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக இருந்த இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஊதியம் வழங்க மறுத்தது. பிறகு குழந்தை மனவளக்கலை பயிற்சி பெற்ற பின் 2003ஆம் ஆண்டிலிருந்து ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அவர்களுக்கு பணியில் சேர்ந்த காலம் முதலே (1995-2003) பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு என போலி கையெழுத்து மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 12 ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதை தொடர்ந்துபள்ளி கல்வித்துறை தஞ்சை மாவட்டத்தில் 1995 முதல் 2003ம் ஆண்டு வரை 12 ஆசிரியர்கள் பெற்ற சம்பளத்தில் ரூ 1.25 கோடியை வசூல் செய்ய வேண்டும். அத்துடன் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், இந்த முறைகேட்டில் தொடர்புயை ஒரத்தநாடு கல்வி மாவட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர் திருவள்ளுவன் (58) என்பவரை பள்ளி கல்வி இணை இயக்குனர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இவர் 2019 ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அஇதற்கிடையில் துறை ரீதியாக விசாரணை நடந்து வந்தது. திருவள்ளுவன் அரசுக்கு ரூ 1.25 கோடி நிதியிழப்பு ஏற்பட காரணமாக இருந்தது விசாரணையின் முடிவில் இறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு கட்டாய ஓய்வு கொடுத்து தமிழ்நாடு பள்ளி கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் சம்மந்தபட்டவர் மீது காவல்துறையில் மோசடி புகார் அளிக்காமல் கல்வி அதிகாரிகள் அவரை மறைமுகமாக சஸ்பெண்ட் என்று போர்வையில் காப்பாற்றப்பட்டுள்ளார் என்றும், அவரே ஓய்வில் இருக்கும்போது, எதற்கு கட்டாய ஓய்வு என்றும், இதில் அதிகாரிகள் தப்பிக்கவே இதுபோன்ற நடவடிக்கைகளில் எடுப்பதாக ஆசிரியர்கள் விமர்சித்துள்ளனர்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |