பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2023-2024 கல்வியாண்டில் நடைபெற்ற 10, 12ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் 2199 தனியார் மெட்ரிக் உயர்நிலை பள்ளிகளும், 1750 தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளுக்கும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.
தனியார் பள்ளிகளை சார்ந்த 78 மாணவ, மாணவியா்கள் சா்வதேச அளவிலும், 255 மாணவ, மாணவியர் தேசிய அளவிலும், 1579 மாணவ, மாணவியர் மாநில அளவிலும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பதகங்கங்களை பெற்றுள்ளனர். 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி நிர்வாகிகள், முதல்வர், ஆசிரியர்களை பாராட்டி ஊக்குவிக்கவும், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்தவும் தமிழ்நாடு அரசு சார்பில் முதல்முறையாக ஆகஸ்டு 4ம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்மொழி முன்னிலையில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதில் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்க உள்ளனர்.