TET Teachers Strike on February 17 | டெட் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் போராட்டம்
TET Teachers Strike from February 17
ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் வரும் வெள்ளிகிழமை உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேச்சி பெற்றோர் நலச்சங்கத்தின் மாநில செயலாளர் கபிலன் சின்னசாமி சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது,
Read Also: Teacher Job Age Limit in Tamil
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை ஆசிரியர் நியமனம் நடைபெறவில்லை. பணி வாய்ப்பின்றி காத்திருக்கும் டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கண்டுகொள்ளவில்லை. இதுதொடர்பாப கடந்தாண்டு மட்டும் 9 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான மறு நியமன போட்டி தேர்வு என்ற அரசாணை 149 ஐ நீக்கம் செய்ய வேண்டும். திமுக ேதர்தல் அறிக்கையில் கூறியுள்ளவாறு, டெட் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 45இல் இருந்து 57 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோாிக்கை வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பிப்ரவரி 17ம் தேதி தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.