You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TET Paper II Question Paper Error |டெட் 2 தேர்வு மதிப்பெண்களை இழந்த தேர்வர்கள்

Typing exam apply Tamil 2023

TET Paper II Question Paper Error | டெட் 2 தேர்வு மதிப்பெண்களை இழந்த தேர்வர்கள்

TET Paper II Question Paper Error

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வு இரண்டாம் தாளில் பல தவறான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தவகல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, பல தேர்வர்கள் தேர்ச்சி மதிப்பெண்ணான 82 ஐ பெற முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் தகுதிதேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 3ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடந்தது. கிட்டதட்ட 2.54 லட்சம் தேர்வர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர். காலை, மாலை 23 வேளைகளில் வெவ்வேறு வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, கணினி மூலம் இத்தேர்வு நடத்தப்பட்டது.

தற்காலிக விடைக்குறிப்பு பிப்ரவரி மாதம் 22ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், தேர்வர்களிடம் இருந்து வினா தொடர்பான ஆட்சேபனைகளை கடந்த பிப்ரவரி மாதம் பெறப்பட்டது இதில் பல தேர்வர்கள் தவறான வினா, அர்த்தமற்ற வினா, தவறான விடைகள் குறித்து தகுந்த ஆதாரத்துடன் தங்களது ஆட்சேபனகைளை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், கடந்த 28ம் தேதி இறுதி விடைக்குறிப்புடன் இரண்டாம் தாளிற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

Read Also: டெட் தேர்வு சமூகநீதி இடஒதுக்கீடு மறுப்பு

இந்த நிலையில், இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், 15,406 தேர்வர்கள் மட்டுமே இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், இதற்கு காரணம் தவறான கேள்விகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாக அதில் தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3,341 தேர்வர்களிடம் இருந்து இரண்டாம் தாள் கேள்விக்கு சுமார் 16,409 ஆட்சேபனைகள் பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் ஒரு சில வினாக்களுக்கு மட்டுமே, ஆசிரியர் தேர்வு வாரியம் மதிப்பெண்கள் வழங்கியதாகவும், மற்ற வினாக்களுக்கு மதிப்பெண் வழங்கவில்லை என தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஆங்கில பிரிவில் ஒரு கேள்வியில் wuyyles என்ற தவறான வார்த்தை இடம்பெற்றதாகவும், Wuzzles என்பதே சரியான வார்த்தை எனவும் தேர்வர்கள் கூறியுள்ளனர். அதேபோல், ரயில் சேவை எந்த மாநிலத்தில் இல்லை என்ற கேள்விக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மேகலாயா என்று விடை கொடுக்கப்பட்டுள்ளது எனவும், ஆனால் சாியான விடை சிக்கிம் என தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பல தவறான கேள்விகள் இடம்பெற்றுள்ளதாகவும், ஆட்சேபனை தெரிவித்தும், டிஆர்பி அதிகாரிகள் மதிப்பெண் வழங்கவில்லை என வேதனை தொிவித்துள்ளனர். இதனால், பல தேர்வர்கள் மதிப்பெண்கள் இழந்து, தேர்ச்சி மதிப்பெண் பெற முடியவில்லை எனவும், தகுதி தேர்வு எழுத முடியாது எனவும் கூறியுள்ளனர். இதனால் அவர்களது ஆசிரியர் கனவு தகர்ந்துவிட்டதாக அதில் தெரிவித்துள்ளனர்.

பயிற்சி மைய நிர்வாகி கூறும்போது, கணினி தேர்விற்கு பின் வினாக்களில் குளறுபடிகள் அதிகரித்துள்ளதாகவும், பழைய நடைமுறையில் எழுத்து தேர்வு நடத்த வேண்டும் என டிஆர்பிக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் எனவும், இதனால் அவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் எனவும் அவர் வலியுறுத்திள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த செய்தியில், டிஆர்பி உறுப்பினர் உமாவிடம் கேட்டதற்கு, தகுந்த ஆட்சேபனைகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். தற்போது இது தேர்வர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.