TET Paper II Latest News | டெட் II தேர்வில் குளறுபடி
TET Paper II Latest News
ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் மதிப்பெண் வழங்கியதில் குழப்பங்கள் சார்ந்து, மனுதாரர் ஒருவர் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் அளித்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மழுப்பல் பதில் அளித்துள்ளது.
மனுதாரர் ஒருவர், ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள் மதிப்பெண் வழங்கியதில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறி, கடந்த ஏப்ரல் மாதம் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தார். மேல் நடவடிக்கைகாக இந்த புகார், ஆசிரியர் தேர்வு வாாியத்திற்கு அனுப்பப்பட்டது.
Read Also: டெட் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்குக
ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்த பதிலில் மனுதாரர் கோரிய தகவல் சார்ந்து உயர்நீதிமன்ற சென்னை மற்றும் மதுரை கிளையில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தகவல் வழங்க வழிவகை இல்லை என கூறியுள்ளார். மேலும், புகார் மனுவும் நிராகரிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
