TET latest news in Tamil | பட்டதாரி ஆசிாியர்களுக்கு போட்டி தோ்வு
TET latest news in Tamil
பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நியமிப்பதற்காக 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய பயிற்றுகளை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது.
இந்த நடவடிக்கை பட்டதாரி ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் தகுதித்தேர்வில் வெற்றிபெற்ற பட்டதாரிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 2018இல் அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 149ன் படி பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் போட்டி தேர்வின் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது.
அரசாணை எண் 149 மற்றும் அதனடிப்படையிலான போட்டி தே்ாவு ஆகிய இரண்டும் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக இப்போது கடந்த ஆட்சியில் திணிக்கப்பட்ட போட்டித் தேர்வை நடத்த துணிந்திருப்பதன் மூலம் தகுதித்தேர்வில் வெற்றிபெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு பெரும் துரோகம் செய்திருக்கிறது.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஒட்டுமொத்த தமிழகமும் என்னென்ன காரணங்களுக்காக எதிா்க்கிறதோ, அந்த காரணங்கள் அனைத்தும் போட்டி தேர்வுக்கு எதிராகவே உள்ளன. எனவே, ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, அரசாணை எண் 149 மற்றும் அதன் அடிப்படையிலான போட்டித் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு ஆணை வெளியிட வேண்டும்
என்று கூறியுள்ளார்.