TET Latest News in Tamil | ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்
TET Latest News in Tamil
ஆசிரியர் காலிபணிடங்களை நிரப்ப, நிதித்துறை செயலர் தலைமையில், விரைவில் ஆய்வுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தெரிவித்தார்,
கோவையில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார புதுப்பிப்பு ஆணை வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில், தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்களை நிரப்பியிருப்பதால், கற்பித்தல் எவ்வித பாதிப்பின்றி நடந்து வருகிறது.
டெட் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் சிலர், நீதிமன்றத்தை அனுகியிருப்பதால், காலியிடங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதில் சிக்கல் உள்ளது. ஆசிரியர் சங்கங்களுடன் சமீபத்தில் இது குறித்து பேசப்பட்டது. தொடர்ந்து, சட்டத்துைற, மனிதவள மேம்பாட்டு துறையுடன் இணைந்து நிதித்துறை செயலர் தலைமையில் கூட்டம் நடத்தி, காலியிடங்கள் நிரப்புவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணப்படும். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுவதில் உள்ள சிக்கல்களை களையவும், அதற்கான வழிகாட்டுதல் வழங்கவும், கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்களுக்கு முறையாக தமிழ் கற்கப்படுவதை உறுதி செய்ய அவ்வப்போது ஆய்வுகள் நடக்கின்றன.
சில இடங்களில் மாணவர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தி, கல்வி உதவித்தொகை பெயரில் மோசடி நடப்பதாக புகார் எழுந்தது. ஆனால், இது கடந்த 2018ல் வெளியானவை என்பது தெரியவந்துள்ளது. மாணவர்களின் தகவல்கள் எமிஸ் இணையதளத்தில் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகிறது, தகவல்கள் கசிய வாய்ப்பில்லை.
நபார்டு வங்கி நிதியுதவி வாயிலாக போதிய வகுப்பறை இல்லாத பள்ளிகளுக்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தர திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.