TET Latest News in Tamil | டெட் தேர்ச்சி அடிப்படையில் பணி நியமனம் - அண்ணாமலை
TET Latest News in Tamil
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி அடிப்படையில் நேரடி பணி நியமனம் வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்துக்காக காத்திருக்கும் இளைஞர்களின் நம்பிக்கையை குலைக்கும் வண்ணம், இன்னுமொரு போட்டித் தேர்வு மூலம் பணி நியமனம் செய்வதற்கான அரசாணை எண் 149 ஐ அமல்படுத்த துடிக்கிறது திமுக அரசு.
தற்போது, பள்ளி கல்வித்துறை ஆணையர் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு பணி நியமன போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வரும் மே மாதம் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.
Read Also: டெட் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்குக
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி நியமனத்துக்காக பத்து ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருந்த நிலையில், இன்னும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பணி என்பது இளைஞர்களின் இத்தனை ஆண்டு கால காத்திருப்பையும், நம்பிக்கையையும் அடியோடு சீர்குலைக்கும் செயல். அதுமட்டுமின்றி, இந்த தகுதித்தேர்வு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி அடிப்படையில் நேரடி பணி நியமனம் செய்ய வேண்டும். போட்டி தேர்வை பரிந்துரைக்கும் அரசாணை எண் 149ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.