TET latest News | டெட் தேர்ச்சி சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய அவகாசம்
TET latest News
டெட் தேர்வில் (2022) தேர்ச்சி அடைந்தவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் இணையதளத்தில் பதவிறக்கம் செய்ய மீண்டும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு வரும் 2024 ஜனவரி 7ம் தேதி நடைபெற உள்ளது.
ஆசிரியர் தோ்வு வாரியம் நடத்தும் இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த நவம்பர் 1ம் தேதி தொடங்கியது. டெட் 2ம் தேதி தாளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள்
www.trb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக ஆா்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நவம்பம் 30ஆம் தேதி வரை உள்ளது.
வரும் ஜனவரி 7 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழை மீண்டும் பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2022ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்வதில் விடுபட்டதாகவும், பதிவிறக்கம் செய்ய அனுமதி கோரி அதிக மனுக்கள் வந்துள்ளன.
இதையடுத்து 2022 டெட் தோ்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் தங்களின் மதிப்பெண் சான்றிதழை டிஆர்பி இணையதளத்தில் இருந்து நவம்பர் 30ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.