TET Free Coaching Center in Coimbatore | ஆசிரியர் தகுதி தேர்வு இலவச பயிற்சி
TET Free Coaching Center in Coimbatore
ஆசிரியர் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் தோ்வுக்கு கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் ெதாழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 18ம் தேதி காலை இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என மாவட்ட கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தோராயமாக 6,553 மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோாராயமாக 3,587 என தொிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் அனைவரும் கலந்துகொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது.
Read Also: தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்தில் தில்லுமுல்லு
இப்பயிற்சி வகுப்புகளில் ஸ்மாாட்போர்டு, இலவச வை பை வசதி, அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பயிற்சி கால அட்டவணை , வாரத்தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள் , பாடக்குறிப்புகள் எடுத்துக்கொள்ள இணையதளத்துடன் கூடிய கணினி வசதி ஆகியவை உள்ளன.
இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் (பொது மற்றும் மாற்றுத்திறனாளி), தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்றுடன், கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அணுகலாம். அல்லது
studycirclecbe@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.