ஆசிரியர் தகுதிதேர்வு யோசனை கூறும் ஜி.கே.வாசன்
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: உடற்கல்வி ஆசிரியர்கள் வேலை வாயப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த 25 ஆண்டுகளாக பதிவு மூப்பு அடிப்படையில் அரசு பணியை நோக்கி எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இவர்களை ஆசிரியர் தகுதி தேர்வு முறையின் மூலம் பணி செய்வதை தவிர்த்து, பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். விளையாட்டில் திறமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அதில் அதிக கவனம் செலுத்துவதால், படிப்பில் கவனம் செலுத்துவது சற்று சிரமமானது. குறிப்பாக மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்க விளையாட்டு வீரர்தான் சரியாக பயிற்றுனராக இருப்பாரே தவிர, புத்தகத்தை மட்டும் படித்து தேர்ச்சி பெறுபவர்கள் பொருத்தமான விளையாட்டு ஆசிரியராக இருக்க மாட்டார்கள். இதனால் மாணவர்களின் உடற்கல்வியில் தடையும், தடங்கலும் வாய்ப்புண்டு.
Read Also This: ஆசிரியர் தகுதிதேர்வு கல்வி அமைச்சரின் கசப்பான பதில்
இந்த நிலையில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தேர்வு முறை மூலம் பணி நியமனம் வழங்குவது பொருத்தமற்றதாக அமையும் என்பதால் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்தால்தான் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன் தரும் என்கிறார்கள். எனவே, பதிவு மூப்பு பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.