TET exam free coaching center | டெட் தேர்வு இலவச பயிற்சி
TET exam free coaching center
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வாயிலாக 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு 2024 ஜனவரி 7ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு அதன் இணையதளத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்விற்கு விண்ணப்பிக்க தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்று பி.எட்ல் 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, ஆசிரியர் தகுதி தோ்வு சான்று (டெட் சான்று) பெற்றிருக்க வேண்டும்.
இத்தேர்வுக்கு உதவும் வகையில் கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் ஸ்மாா்ட் போர்டு, இலவச வைபை, அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வுகள், வாரத்தேர்வுகள், முழு ேதர்வு தேர்வு நடத்தப்படும்.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மேட்டுப்பாளையம் சாலையில், கவுண்டம்பாளையத்தை அடுத்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. தேர்வர்கள் நேரடியாக சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம்.