Read Also: Environment Protection Award in Tamil
எனினும், போக்குவரத்து துறை, தலைவர் அலுவலக கடிதத்தில், மாநகா் போக்குவரத்து கழகம் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நடத்துநர்கள் தமது பணியின்போது, பயணிகள் ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான நாணயத்தை பயணச்சீட்டு வாங்க, அளிக்கும்போது நடத்துநர்கள் பெற மறுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து, அனைத்து அரசு போக்குவரத்து கழக நடத்துநர்களுக்கு இதுகுறித்து உரிய அறிவுறுத்தல் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசால் வெளியிடப்படும் ரூ10 மற்றும் ரூ.20 மதிப்பிலான நாணயத்தை பயணிகள் பயணச்சீட்டு வாங்க மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் நடத்துநரிடம் அளிக்கும்போது அதனை நடத்துநர்கள் மறுக்காமல் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டு உரிய பயணச்சீட்டு அவர்களுக்கு வழங்கிட வேண்டும், என இதன்மூலம் மீண்டும் உத்தரவிடப்படுகிறது. எக்காரணம் கொண்டு பயணிகள் அளிக்கும் ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பலான நாணயத்தை பெற்றுக்கொள்ள நடத்துனர்கள் மறுக்கக்கூடாது. அவ்வாறு நடத்துனர்கள் ரூ10 மற்றும் ரூ20 மதிப்பிலான நாணயத்தினை பெற்றுக்கொள்ள மறுப்பதாக புகார் பெறப்படின் சம்மந்தப்பட்ட நடத்துநாின் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஏதுவாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே, அனைத்து கிளை மேலாளர்கள், உதவி கிளை மேலாளர்கள் (போ) மற்றும் அனைத்து நேரகாப்பாளர்கள் ஆகியோர் இதுகுறித்து நடத்துநர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறி அவர்களிடம் கையொப்பம் பெற்று எதிர்காலத்தில் இத்தகைய புகார் ஏதும் எழாமல் பணிபுரிய அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்களும் பேருந்து பயணத்தின்போது இதுபோன்ற சிக்கல் எதிர்கொண்டால், இந்த கடிதத்தை அவர்களிடம் காட்டவும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் அனுப்பவும், விழிப்புணர்வு பெறட்டுமே..