தற்காலிக ஆசிரியர் நியமனம் காலிபணியிடங்கள், கல்வித்தகுதி, முன்னுரிமை குறித்து புதிய அறிவிப்பு
தற்காலிக ஆசிரியர் நியமனம்
பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், ஊராட்சி, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023ம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்பார்க மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கை குறித்து ஏற்கனவே வெளியிடப்பட்ட செயல்முறைகளில் வழங்கப்பட்ட வழிகாட்டு முறைகளில் தொடர்ச்சியாக உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் வழிகாட்டுதலின்படி திருத்திய வழிகாட்டி முறைகள் வழங்கப்படுகிறது.
Read Also This: ஏற்கனவே வெளியிடப்பட்ட தற்காலிக ஆசிரியர் பணி செய்தி
காலிபணியிடங்கள்
1.6.2022 தேதியில் தொடக்க கல்வி, பள்ளி கல்வித்துறையின் கீழ் வரும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப்பள்ளகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்ங
விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பதாரர்களிடம் இருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
- மேற்கூறியவாறு, மாவட்ட கல்வி அலுவலர் பெறும் விண்ணப்படங்களை, விண்ணப்பதாரர் தற்காலிக நியமனம் கோரும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு அனுப்பி வைக்க வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர் கூறிய அறிவுரையின்படி பின்பற்றி செயல்பட வேண்டும்.
கால அட்டவணை
- காலி பணியிடங்கள் விளம்புகை (பள்ளி வாரியான அனைத்து காலி பணியிடங்கள் குறித்த விவரங்களையும் சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்க வேண்டும், மாவட்ட அளவில் செய்திக்குறிப்பு வெளியிட வேண்டும் – (2.7.2022)
- விண்ணப்பதாரர்கள் மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் (4.7.2022 முதல் 6.7.2022 மாலை 5 மணிக்குள்)
- பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் கல்வி சான்றுகளை கூர்ந்தாய்வு செய்து, விண்ணப்பதாரர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள கூகுள் ஷீட் படிவத்தில் முதன்மை கல்வி அலுவலர் பள்ளி கல்வி ஆணையரகத்திற்கு அளிக்க வேண்டிய நாள் (6.7.2022 - 8 மணிக்குள்)
- விண்ண்பதாாரர்கள் தங்களது விண்ணப்பங்களை மின்னஞ்சல் வாயிலாக தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிட ஏதுவாக சம்மந்தப்பட்ட அலுவலர்களின் மின்னஞ்சல் முகவரியினை செய்திக்குறிப்பில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
கல்வித்தகுதி
- இடைநிலை ஆசிரியர் பதவிக்கு அரசாணை நிலை எண் 12, பள்ளி கல்வித்துறை நாள் 30.01.2020ன்படி வரையறுக்கப்பட்டுள்ள கல்வித்தகுதிகள் (ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்)
- பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு அரசாணை நிலை எண் 13 பள்ளி கல்வித்துறை நாள் 30.1.2020ன்படி வரையறுக்கப்பட்டுள்ள கல்வித்தகுதிகள் (ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்)
- முதுகலை ஆசிரியர் பதவிக்கு அரசாணை நிலை எண் 14 பள்ளி கல்வித்துறை நாள் 30.01.2020ன்படி வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதிகள்
- முன்னுரிமை ஒரு காலிப்பணியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கும்போது பின்வரும் முன்னுரிமை பரிசீலிக்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர்
- வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள்.
- வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
முதுகலை ஆசிரியர்கள்
- முதுகலை ஆசிரியர் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பு கலந்துகொண்டவர்கள்.
- பள்ளி அமைந்துள்ள ஊராட்சி எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்) பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்) மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள், அல்லது அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்கள்.
- மாவட்ட கல்வி அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பதாரர்களது விண்ணப்பங்கள் மற்றும் கல்வி சான்றுகளை சம்மந்தப்பட்ட பள்ளி தலைைம ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் அல்லது மூத்த ஆசிரியரை கொண்ட குழு சரிபார்த்து, தகுதியானவர்களை வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்த அறிவுறுத்தி, அதன் அடிப்படையிலும் அவர்களது திறனை அறிய வேண்டம். தொடக்க கல்வி துறை பொறுத்தமட்டில் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்/குறுவள மைய/வட்டார வள மைய மேற்பார்வையாளர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆகியோரை கொண்ட குழு மேற்சொன்ன வழிமுறைகளின்படி தற்காலி ஆசிரியர்களை தெரிவு செய்யும். அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் குறித்த விவரங்களை பள்ளி, பதவி, பாட வாரியாக தயார் செய்து தேர்வு குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கையொப்பத்துடன் தீர்மானம் நிறைவேற்றி தொடக்க, நடுநிலை பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு தொடர்புடைய முதன்மை கல்வி அலுவலரும் ஏற்பளிப்பு செய்ய வேண்டும்.
- தற்காலிகமாக நியனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு தனியே வருகைப் பதிவேடு மற்றும் மதிப்பூதியம் வழங்கப்பட்டதற்கான பற்றொப்பப் பதிவேடு மட்டும் பேனப்பட வேண்டும்.
- கல்வித்தகுதி அல்லாதோர் விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பங்களையும் பெற்றுக்கொண்டு இணைப்பில் கண்டுகள்ள கூகுள் ஷீட்டில் சார்ந்த விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
- இந்த நியமனமானது முற்றிலும் தற்காலிகம் எனவும், மாறுதல், முறையான நியமனங்களின் மூலம் காலிப்பணியிடம் பூர்த்தி செய்யப்படும் அன்றே தற்காலிக ஏற்பாட்டின்பேரில் பணியமர்த்தப்பட்டவர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார். பணியில் திருப்தி இல்லையென்றால் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்.
தற்காலிக ஆசிரியர் பணிநியமனம் Revised Guidelines PDF - Click Here