ஆசிரியர் பணி நியமனம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஆசிரியர் பணி நியமனம்
பின்வாசல் வழியாக நியமனம் பெற்றவர்களை பணி வரன்முறை செய்யக்கூடாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெற்றோர் – ஆசிரியர் சங்கம் வாயிலாக, அரசு பள்ளிகளில் பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்களாக தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட கோவிந்தராசு என்பவர் உள்ளிட்ட நான்கு பேர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
பணி வரன்முறை செய்யக் கோரியதை, பள்ளி கல்வித்துறை நிராகரித்ததை எதிர்த்து, இந்த வழக்கு தொடரப்பட்டது. பல ஆண்டுகளாக பணியில் இருக்கும் தங்களை, பணி வரன்முறை செய்ய உத்தரவிடவும், மனுவில் கோரப்பட்டது.
மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு,
விதிகளை தளர்த்தி, பணி வரன்முறை செய்து, அரசு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அவ்வாறு, விதிகளை தற்போது தளர்த்த முடியாது, முறையற்ற நியமனங்களை விதிகளை தளர்த்தி வரன்முறை செய்ய முடியாது. தேர்வு விதிகளை மீறி பணி வரன்முறை மற்றும் நிரந்தரம் செய்ய முடியாது. அரசு வேலைக்காக போட்டி தேர்வுகளை, லட்சகணக்கில் இளைஞர்கள் எழுதுகின்றனர்.
அப்படி இருக்கும்போது, பின் வாசல் வழியாக சட்டவிரோதமாக நடத்த நியமனங்களை பணி வரன்முறை செய்தால், மற்றவர்களின் உரிமைகளில் மீறல் நடப்பது போலாகும். போட்டி தேர்வு வாயிலாக, தகுதியானர்வா்களுக்கு பணி கிடைப்பதை உறுதி செய்ய, பின்வாசல் வழியான நியமனங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். தகுதி படைத்தவர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றங்களுக்கு உள்ளது.
Read Also This: இல்லம் தேடி கல்வி போன்று ஆசிரியர் பட்டதாரிகளுக்கு இன்னொரு வாய்ப்பு?
எனவே, பின்வாசல் வழியாக நியமனம் பெற்றவர்களை, பணி வரன் செய்யக்கூடாது. அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களை, எந்த வாசல் வழியாக வந்தனரோ, அந்த வாசல் வழியாக திருப்பி அனுப்ப வேண்டும். மறுதாரர்களை பொறுத்தவரை, கல்வித்துறையால் நியமிக்கப்படவில்லை. பெற்றோர் ஆசிரியர் சங்கம் வாயிலாக நியமிக்கப்பட்டுள்ளனர். சங்கம் பராமரிக்கும் நிதிவாயிலாக சம்பளம் பெறுகின்றனர். அவர்களுக்கு பணி வரன்முறை வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.