தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் சிக்கல்? நீதிமன்றத்தில் திடீர் வழக்கு
தற்காலிக ஆசிரியர்கள் நியமன வழிகாட்டுதலுக்கு எதிரான வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.
கரூர் மாவட்டம் சின்னமநாயக்கன்பட்டி பர்வதம் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
பி.எஸ்சி., - பி.எட்., மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். தமிழகத்தில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களில் தற்போது தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு ஜூன் 23ல் உத்தரவிட்டது.
இதற்கு தகுதி தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்ற குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிக்கவில்லை, பொது அறிவிப்பு செய்யவில்லை. இதற்கு எதிராக ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி அடைந்தோர் நலச்சங்கம் ஷீலா பிரேம்குமாரி இந்த நீதிமன்றத்தில் மனு செய்தார்.
ஜூலை 1ல் தனி நீதிபதி, தற்காலிக ஆசிரியர்கள் நியமன அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதித்தார். தொடர்ந்து, தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித்துறை ஆணையர் வெளியிட்டார்.
READ ALSO THIS: ஆசிரியர் பணி நியமனம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அதில் கல்வித்தகுதி, முன்னுரிமை விபரங்கள் இடம்பெற்றன. அதில் இடஒதுக்கீடு பின்பற்றபடவில்லை. விண்ணப்பிப்போர் பள்ளி அமைந்துள்ள ஊராட்சி அல்லது ஒன்றியம் அல்லது மாவட்டத்திற்குள் அல்லது அருகில் உள்ள மாவட்டத்திற்குள் மாவட்டத்தில் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனை ஏற்புடையதல்ல. வழிகாட்டுதலுக்கு தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, பர்வதம் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதி ஜி சந்திரசேகரன் இதுதொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உயர்நீதிமன்றம் மதுரை கிளை பிறப்பித்துள்ள உத்தரவு நகலை மனுதாரர் தரப்பில் ஜூலை 11ல் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.