You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

தற்காலிக ஆசிரியர் பணி தற்காலிகமாக நிறுத்தம்? (THANTHI TV LIVE NEWS)

தற்காலிக ஆசிரியர் பணி||

தற்காலிக ஆசிரியர் பணி (13,331 இடம்) |இல்லம் தேடி தன்னார்வலர்களுக்கு ஜாக்பாட்

தற்காலிக ஆசிரியர் பணி தற்காலிகமாக நிறுத்தம்? (THANTHI TV LIVE NEWS)

https://youtu.be/h2NXljLNH_I
பள்ளி கல்வித்துறை மாணவா்கள் நலன் கருதி, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 இடங்களில் தற்காலிக ஆசிரியர்களை பள்ளி மேலாண்மை குழு மூலமாக நியமிக்க உத்தரவிட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர் பணி

நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் நலன் கருதி, பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரிகள் நியமிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடங்களிலும் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க ஏற்பாடு செய்து, அதற்கான அறிவிப்பையும் தற்போது கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு சிறிது காலம் ஆகும் என்பதால், கல்வித்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் அதில் கூறியிருப்பதாவது,

4,989 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடம் மற்றும் 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடம் அரசு பள்ளிகளில் காலியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர்கள் ஜூலை 2022 முதல், பிப்ரவரி 2023ம் ஆண்டு வரை தற்காலிகமாக பள்ளிகளில் பணியாற்றுவர்கள். பள்ளி மேலாண்மை குழுவினர் அந்தந்த ஊர் அல்லது பள்ளி அருகாமையில் உள்ள தகுதியுள்ள நபர்களை பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் குழு மூலமாக தற்காலிகமாக முறையில் நியமிக்க கல்வித்துறை அனுமதித்துள்ளது.

இடைநிலை ஆசிாியர்களுக்கு மாதம் ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ 10,000 மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் மதிப்பூதியம் வழங்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

எவ்வித புகாருக்கு இடமளிக்க வண்ணம், தகுதிவாய்ந்த ஆசிரியர்களை பள்ளி மேலாண்மை குழு நியமிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர் பணி
தற்காலிக ஆசிரியர் பணி
அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், தற்காலிக ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை, காலிபணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலமாகவே, பதவி உயர்வு மூலமாகவோ, பணி மாறுதல் மூலமாகவே ஆசிரியர்கள் வந்தால், தற்காலிக ஆசிரியர்களை பணிவிடுப்பு செய்ய வேண்டும்.

TEMPORARY TEACHER SCHOOL EDUCATION DEPARTMENT NOTIFICATION PDF - DOWNLOAD HERE

டெட் முடித்த பட்டதாரிகளுக்கும், இல்லம் தேடி தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு அதன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.