ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் நிரப்ப தகுதிவாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
பொது தேர்வு எழுதும் மாணவர்கள் கல்வி நலன் கருதி, பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக முறையில் மாதம் ரூ 18 ஆயிரம் சம்பளத்தில் (தொகுப்பூதியம்) இந்த காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், தேர்வு செய்யப்படும் பட்டதாரிகள் ஏப்ரல் 2025 வரை பணியில் தொடர்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களை விளம்பரங்கள் பள்ளி வாரியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்களை ஜூன் 24 முதல் ஜூன் 26க்குள் மாவட்ட அளவில் செய்திக்குறிப்பு வெளியிட வேண்டும் எனவும், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்க வேண்டும் எனவும் அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.