கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு, தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களை நீக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூரில் ஊரக வளர்த்துறையில் 1997ல் கணிப்பொறி உதவியாளராக தினக்கூலி சம்பளத்தில் நியமிக்கப்பட்ட சத்யா என்பவர், தனது பணிவரன்முறை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்து 12 வாரங்களில் முடிவெடுக்க ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதே துறை சார்பில் சென்ைன நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்ரமணி மற்றும் ஜி அருள்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படாது என தலைமை செயலர் மனுதாக்கல் செய்வாரா எனக் கோள்வி எழுப்பினர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் தலைமை செயலர் தாக்கல் செய்த மனுவில், தற்காலிக பணி நியமனங்களை கைவிடுவது என 2020 நவம்பர் 28ம் தேதி அரசாணை பிறக்கப்பிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். இவர்கள் நியமனம் செய்தவர்கள் மீது ஒழங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மார்ச் 17ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.குறிப்பாக, கல்வித்துறையில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்கள், ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.