ஆசிரியர்களை தரக்குறைவாக பேசிய முதன்மை கல்வி அலுவலர் மீது நடவடிக்கை கோரிக்கை இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு போர்ககொடி உயர்த்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட முதன்ைம கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி கடந்த 12ம் தேதி மாவட்டத்தில் உள்ள முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலை பள்ளியை பார்ைவயிட்டு ஆய்வு செய்தார். அப்போது முதன்மை கல்வி அலுவலர் அங்குள்ள ஆசிரியர்களை தரக்குறைவாகவும் அநாகரீகமாகவும் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இவரின் செயல்பாடு மீது அதிருப்தி அடைந்த ஆசிரியர்கள் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைைய மேற்கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை வலியுறுத்தி உள்ளனர். Read Also: முதன்மை கல்வி அலுவலர் மீது துறை ரீதியான விசாரணைஇந்த நிலையில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் கழகம் முதன்மை கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இல்லாவிடில், போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என கல்வித்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.