இல்லம் தேடி கல்வி போன்று ஆசிரியர் பட்டதாரிகளுக்கு இன்னொரு வாய்ப்பு?
இல்லம் தேடி கல்வி
ஆதிதிராவிடர் நல ஆணையரகம் ஆணையர், அனைத்து அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உயர், மேல்நிலைப்பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 2006-2007ஆம் கல்வியாண்டு முதல் சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில் நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடப்பட்டுள்ளது. இதுபோன்றே ஒவ்வொரு நிதி ஆண்டிலும் தொகை ஒப்பளிப்பு செய்யப்பட்டு செலவினம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி அரசாணை மற்றும் வரவு செலவு திட்டம் ஒதுக்கீட்டை பின்பற்றியும் ஆண்டுதோறும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Read Also This: முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு
இந்நேர்வில், 2022-23ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தின்படி 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கில பாடங்களில் சிறப்பு பயிற்சி அளிக்கவும், அதேபோன்று, 11 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு இயற்பியல், வேதியியல், உயரியல், கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களில் சிறப்பு பயிற்சி அளிக்கவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிறப்பு பயிற்சிக்கான நேரம் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு சனிக்கிழமையும், மாணவ, மாணவியரின் செயலாக்கம் தேர்வாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் அந்தந்த பள்ளிகளில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும்,
பாடப்பிரிவு வல்லுநர் நியமித்தல் போன்றவை பெற்றோர் ஆசிரியர் கழகம் செயல்படுத்தப்படும் எனவும் மேலும் பாடப்பிாிவு வல்லுநர்களுக்கு (பட்டதாரி ஆசிரியர்) மாதம் ரூ.2,000 வீதமும் இதேபோன்று 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் வல்லுநர்களுக்கு (முதுகலை பட்டதாரி ஆசிரியர்) மாதம் ரூ.2500 வீதமும் மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் அரசு ஆணையிட்டுள்ளது.
எனவே, 2022-2023 கல்வியாண்டில் ஜூன் மாதம் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஆதிதிராவிடர் நல உயர், மேல்நிலை பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிறப்பு பயிற்சி அளித்திடவும், ஒவ்வொரு சனிக்கிழமையும் மாணவ, மாணவியரின் செயலாக்கம் தேர்வாய்வு செய்திடவும் தேவைப்படும் ஆசிரியர்கள் எண்ணிக்கை, 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரத்தினை வரும் 7ம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
(தகவலுக்காக)
இதில், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி முடித்த பட்டதாரிகள் மேற்கண்ட தகவல் அடிப்படையில் நியமிக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் மாவட்டத்தில் அருகாமையில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளிகளில் இதனை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
PDF HAS BEEN GIVEN TO DOWNLOAD - CLICK HERE