Teachers fight at Tirunelveli district | தலைமை ஆசிரியை தாக்கிய ஆசிரியை
Teachers fight at Tirunelveli district
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளபதி சமுத்திரத்தில் அரசு மேல்நிலை பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் கண்ணநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஸ்டெல்லா ஜெயசெல்வி வேதியியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் அங்கு பயிலும் மாணவ, மாணவிகளை அவதூறாகவும், ஆபாசமாகவும் திட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தளபதி சமுத்திரம் கீழுர் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவரையும், மாணவி ஒருவரையும் ஆபாசமாக வசைபாடியதாக தெரிகிறது.
இதைதொடர்ந்து, மாணவரின் பெற்றோர் ஆசிரியை ஜெயசெல்வி குறித்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்திடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தலைமை ஆசிரியை ஸ்டெல்லா செல்வியிடம் விளக்கம் கேட்டு, மெமோ வழங்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வி, மெமோவை கிழித்து, தலைமை ஆசிரியை முகத்தில் வீசி, ஆபாசமாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், செல்வி, தலைமை ஆசிரியை தாக்கிய, தங்க சங்கலியை பிடித்து பறித்துள்ளார். மேலும், தலைமை ஆசிரியை கையையும் கடித்து வைத்ததால், அவர் வலியால் துடிதுடித்துள்ளார். இதுகுறித்து, வேதியியல் ஆசிரியை ஸ்டெல்லா ஜெயசெல்வி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.