You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Teachers CRC Training Date June | ஆசிரியர்கள் சிஆர்சி பயிற்சி தேதி அறிவிப்பு

Typing exam apply Tamil 2023

Teachers CRC Training Date June | ஆசிரியர்கள் சிஆர்சி பயிற்சி தேதி அறிவிப்பு

Teachers CRC Training Date June

இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சிகளை (Teacher Professional Development) 2023-2024 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக ஆசிரியர்களுக்கு மாநில அளவில் முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி 30.5.2023 மற்றும் 31.5.2023 அன்று நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி 8.6.2023 மற்றும் 9.6.2023 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்றது.

மேலும் 6 முதல் 19ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 10.6.2023 அன்று நடைபெற இருந்த குறு/வட்டார வளமைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அந்த கூட்டம் மீண்டும் 17.6.2023 அன்று நடைபெற உள்ளதால், அனைத்து மாவட்ட கருத்தாளர்களும் மற்றும் 6 முதல் 10ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.