You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

பாலியல் சேட்டை செய்தால் கல்விச்சான்றிதழ் ரத்து - கல்வி அமைச்சர் பேட்டி

Anbil Mahesh Poyyamozhi act as Udhyanidhi’s fan club

பாலியல் விவகாரம் தொடர்பாக பள்ளிகளில் இனி புகார் எழுந்தால், யார் தவறு செய்திருந்தாலும் அவர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என பள்ளி கல்வித்துைற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி அரசு பள்ளி மாணவி, மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்டது தெரியவந்தது. மணப்பாைறயில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி நிர்வாகிகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலையில், பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வி தகுதி ரத்து செய்யப்படும் என அதிரடி உத்தரவு பிறக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை மகேஷ் கூறியிருப்பதாவது, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு, நிரூப்பிக்கப்பட்டால் யார் தவறு செய்திருந்தாலும் அவர்களின் கல்விச்சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும். பாலியல் தொல்லை குறித்து மாணவிகள் புகார் அளிக்க புதிய திட்டம் ெகாண்டுவரப்படும் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு போலீசார் மூலம் கடும் தண்டனை பெற்றுதரப்படும்.

Read Also: முன்பருவ கல்வி ஆசிரியை கொடுமை செய்யும் தலைமை ஆசிரியை

தமிழகத்தில் நடந்து வரும் பாலியல் குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். வருங்காலத்தில் இதுபோல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க  பள்ளி கல்வித்துறை மற்றும் போலீசார் இணைந்து நடவடிக்கை எடுப்போடும், இவ்வாறு அவர் கூறினார்.