பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை, பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும், பகுதி நிதியுதவி பள்ளிகள், பயிற்சி நிலையங்கள் மற்றும் சார்ந்த அலுவலகங்களில் அகத்தணிக்கைகளின் அடிப்படையில் வெளியிடப்படும் தணிக்கை அறிக்கையின் மீது கீழ்க்கண்ட தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.முந்தைய மற்றும் நடப்பு நிதி சார்ந்த நிதி தணிக்கை தடைகள் குறிப்பாக 21(இ) மற்றும் 21(உ) அறிக்கை பெறப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் சார்ந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், பணியாளர்கள் பணிப்பதிவேட்டில் பதியப்பட வேண்டும்.இரண்டு வாரங்களுக்குள் சார்ந்த ஆசிாியா்கள், தலைமை ஆசிரியா்கள், வட்டார கல்வி அலுவலர்கள், பணியாளர்களுக்கு தணிக்கை தடைகள் சார்பு செய்யப்பட வேண்டும். சார்ந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், பணியாளர்கள் பணி மாறுதலில் செல்லும்போது நிதி சார்ந்த தணிக்கை தடைகள் குறித்து முன் ஊதிய சான்றில் (எல்பிசி) தவறாது குறிப்பிட வேண்டும்.ஒய்வுப் பெற்ற/ பெறும் நாள் வரை தணிக்கை செய்யப்பட்டு பெறப்பட்ட தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே சார்ந்த ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்கள்/ வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் இதர பணியாளர்கள் மீது முந்தைய மற்றும் நடப்பு நிதி சார்ந்த தணிக்கை தடைகள் குறிப்பாக 21(இ) மற்றும் 21(உ) ஏதும் நிலுவையில் இல்லை என்பதை உறுதி செய்து, அதன் பின்னரே சார்ந்த ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்கள் / வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு தடைமையின்மை (என்ஒசி) சான்று வழங்கப்பட வேண்டும்.தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி இரண்டு மாதத்திற்குள் தணிக்கை தடைகள் களைந்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.மேற்கண்ட அறிவுறுத்தல்களை தவறாது பின்பற்றமாறும், பின்பற்றப்படாத நிலையில், அரசிற்கு ஏற்படும் கூடுதல் நிதி இழப்புகளுக்கு சார்ந்த ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்கள் / வட்டார கல்வி அலுவலர்கள் / பணியாளர்களுக்கு தடையின்மை சான்று வழங்கிய அலுவலர் மற்றும் சார்ந்த சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் டிடிஒ பொறுப்பாவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.