ரூ. 25 லட்சம் மோசடி - ஆசிரியர் சங்க தலைவா், செயலாளர் திடீர் கைது
சேலம் மாவட்டம் கொளத்தூரில் யூனியன் பணியாளா் மற்றும் ஆசிரியர்கள் சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஓமலூர் சரக துணைப்பதிவாளர் சுவேதா மற்றும் கூட்டுறவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து வழங்கப்படும் காசோலைகளை திருத்தியும், மேலும் பல வகையிலும் ரூ.25 லட்சம் வரையில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. READ ALSO THIS |பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு பின்பற்ற வேண்டிய முக்கியமான நடைமுறைகள் இதையடுத்து சங்க செயலாளரான நங்கவள்ளியை சேர்ந்த சிட்டி முருகன் (52) என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் இந்த மோசடி தொடர்பாக வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சித்ரா தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் காசோலைகளில் திருத்தம் செய்து ரூ.24.91 லட்சம் மோசடி நடந்திருப்பதும், சங்கத்தின் தலைவர் பிரபு (48) செயலாளர் சிட்டி முருகன் ஆகியோர் இதில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆத்தூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.