செப்டம்பர் 1ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில், முதல் நாளான திங்களன்று பல மாவட்டங்களில் 5க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடர்ச்சியாக செய்தி சேனல்களில் ஒளிபரப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து, சுகாதாரத்துறை சார்பில் பள்ளிகளில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு, கொரோனா சளி மாதிரி சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பள்ளிகளில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அதன் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாக செய்திகள் ஒளிப்பரப்பாகின்றன. மேலும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் 15 நாட்கள் ஒரு முறை பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், பள்ளிக்கு வருகை புரியும் மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் பாிசோதனை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாக செய்திகள் ஒளிப்பரப்பாகின்றன. இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்துகள் மறக்காமல் கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.