Teachers Administrative transfer News | ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு
Teachers Administrative transfer News
தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளியின் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுப்பணியில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து கடிதம் கண்ட 24 மணி நேரத்திற்குள் மின்னஞ்சல் மூலமாகவும், புலனம் வாயிலாகவும் அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Also: உபரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு
இதற்கிடையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூறும்போது, ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு முறையாக நடைந்த பின் தொடக்க கல்வி அதிகாரிகள் முறைகேடாக பணம் பெற்றுக்கொண்டு ஆசிரியர் கேட்கும் இடத்திற்கு பணி மாறுதல் கொடுத்து வருகின்றனர். இதற்கு பல லட்சங்கள் கொடுத்து ஆசிரியர்கள் சொந்த இடத்திற்கு சென்றுள்ளனர். ஏற்கனவே, மதுரை நீதிமன்றம் மாறுதல் கலந்தாய்வு மூலம் மட்டுமே ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும் என்ற விதியை பின்பற்றாமல், அதிகாரிகள் தங்கள் சுயலாபத்திற்காக அரசாணை ஒன்று புதிதாக வெளியிட்டு, அதில் நிர்வாக மாறுதல் வழங்கலாம் என்ற வாசகத்தை இணைத்து, பணம் வசூலித்து மாறுதல் செய்து கொண்டிருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.