You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

விஜய் பாடலுக்கு நடனமாடிய ஆசிரியை சஸ்பெண்ட்

விஜய் பாடலுக்கு நடனமாடிய ஆசிரியை சஸ்பெண்ட்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் அரசு பள்ளி ஆசிரியை நடனம் ஆடிய நிலையில் கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேனி. இவர் வெள்ளத்தேவன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிாியராகவும், மேலும் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் சாா்பில் சில தினங்களுக்கு முன்பு ஒரத்தநாடு அருகே மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. 

அந்த விழாவில் நடிகரும் மற்றும் தவெக தலைவர் விஜய் பாடலான ’கோடம்பாக்கம் ஏரியா, ஒட்டு கேட்டு வரியா, என்ற பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். தற்போது அவர் நடனமாடிய காணொளி சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்தது. மேலும், விதிகளை மீறி, அரசியல் கட்சி நிகழ்வில் பங்கேற்று நடனமாடியது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனை தொடா்ந்து, அவரை பணியிடை நீக்கம் செய்து பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுலர் மதியழகன் உத்தரவிட்டார். இந்த சம்பவம் கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.